16 வயது மாணவி மாதக்கணக்கில் பாலியல் பலாத்காரம்..! டியூஷன் டீச்சருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம்..!

21 January 2021, 9:23 pm
Judgement_UpdateNews360
Quick Share

வதோதராவைச் சேர்ந்த ஒரு டியூஷன் டீச்சர் வினு கட்டாரியா தனது மாணவிகளில் ஒருவரை 3 மாதங்கள் தொடர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நல்ல மதிப்பெண்கள் வழங்குவதாகக் கூறி, 2018’இல் குற்றவாளியால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

துஷ்பிரயோகம் நடந்தபோது 16 வயதே ஆன சிறுமி, அகமதாபாத், சூரத் மற்றும் பத்ராவில் உள்ள ஹோட்டல்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஜனவரி மற்றும் மார்ச் 2018’க்கு இடையில் இந்த சிறுமி மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமி கட்டாரியாவின் வீட்டிற்கு பயிற்சிக்கு செல்வது வழக்கம்.

கட்டாரியா இந்த சிறுமியிடம் அத்துமீறியதுடன் அதை படமாக்கி, கிளிப்களைப் பயன்படுத்தி சிறுமியை பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார். கட்டாரியா வீடியோக்களை பகிரங்கப்படுத்துவதாக அச்சுறுத்தி, தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கின் விசாரணையின் போது, ​​கூடுதல் அரசு வக்கீல் ஆசிரியருக்கு எதிராக சாட்சியங்களை சமர்ப்பித்தார். ஆசிரியருக்கு எதிராக சாட்சிகளையும் விசாரித்தனர். கட்டாரியாவுக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றம் உறுதிசெய்து, இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் நீட்டிக்கக்கூடிய கடுமையான சிறைக்கு அனுப்பப்பட்டார்.  

மேலும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் அந்த நபரை சிறையில் அடைத்து, அவருக்கு ரூ 13,000 அபராதமும் விதித்தது. இந்த தீர்ப்பை சிறப்பு போக்ஸோ நீதிபதி ஜி.டி.பாசி வழங்கினார்.

Views: - 0

0

0