மும்பையில் தொடர் கனமழை எதிரொலி: விகார் ஏரியை தொடர்ந்து துல்சி ஏரியும் நிரம்பியது!!

Author: Aarthi Sivakumar
22 July 2021, 3:49 pm
Quick Share

மும்பை: கனமழை காரணமாக விகார் ஏரி நிரம்பியதையடுத்து தற்போது மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரியும் நிரம்பியுள்ளது.

மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் துல்சி ஏரியும் ஒன்றாகும். கடந்த சில தினங்களாக மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக விகார் ஏரி அண்மையில் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

Mumbai: Tulsi lake overflows as heavy rains continue to pound city

இதனை தொடர்ந்து நேற்று மும்பை சஞ்சய்காந்தி பூங்காவில் உள்ள துல்சி ஏரியும் தனது முழு கொள்ளளவான 8 ஆயிரத்து 46 மில்லியன் லிட்டர் அளவை எட்டியது. இதனால் உபரி நீர் ஏரியில் இருந்து வெளியேறியது. இந்த 2 ஏரிகளும் மும்பை சஞ்சய்காந்தி பூங்காவின் உள்புறமாக அமைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.‘

Vihar Lake, Mumbai: How To Reach, Best Time & Tips

மற்ற ஏரிகளான வைத்தர்னா, மேல்வைத்தர்னா, பாட்சா, மோடக்சாகர் மற்றும் தான்சா ஆகிய 5 ஏரிகள் முழு கொள்ளளவை இன்னும் எட்டவில்லை. வருகிற நாட்களில் கனமழை தொடரும் பட்சத்தில் இந்த ஏரிகளும் நிரம்ப வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 231

0

0