இந்துக் கோவிலில் நமாஸ் செய்த இஸ்லாமியர்கள் மீது வழக்குப் பதிவு..!

2 November 2020, 10:50 am
Two_booked-for_offering_namaz_in_temple_updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் இந்துக்களின் புனித நகரங்களில் ஒன்றான மதுராவில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு இஸ்லாமியர்கள் நமாஸ் செய்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம்கள் மதுராவில் உள்ள புகழ்பெற்ற நந்தபாபா கோவில் வளாகத்தில் நமாஸ் செய்ததோடு, குரானையும் வாசித்துள்ளனர்.

கோவில் அதிகாரிகளை ஏமாற்றி இருவரும் அக்டோபர் 29’ஆம் தேதி கோவில் வளாகத்தில் நமாஸ் செய்ததாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள் முதலில், மதுராவில் வசிக்கும் மதுவந்தத் சதுர்வேதி என்பவரால் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

அதில் உள்ள இரண்டு பேரில் ஒருவர் பைசல் கான் என்றும் மற்றவர் முகமது சந்த் என்றும் அவர் எழுதியுள்ளார். அவர்கள் இருவரும் தங்கள் இரு இந்து நண்பர்களான நிலேஷ் குப்தா மற்றும் அலோக் ரத்னா ஆகியோருடன் அந்த பகுதிகளை சுற்றிப் பார்க்க டெல்லியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பைசல் கான் மற்றும் முகமதுசந்த் இருவர் மீதும், உத்தரபிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Views: - 27

0

0

1 thought on “இந்துக் கோவிலில் நமாஸ் செய்த இஸ்லாமியர்கள் மீது வழக்குப் பதிவு..!

Comments are closed.