டிப்பர் லாரி மீது இரண்டு கார்கள் மோதி கோர விபத்து : செம்மரம் கடத்தி வந்த 4 பேர் உடல் கருகி பலியான சோகம்!!

2 November 2020, 2:04 pm
Car Accident - Updatenews360
Quick Share

ஆந்திரா : கடப்பா அருகே டிப்பர் லாரி இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் செம்மரம் கடத்தி வந்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி சாம்பலாகினர்.

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள கோட்டூரு சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் இன்று அதிகாலை டிப்பர் லாரி ஒன்று ஜல்லி கற்களை இறக்கிவிட்டு வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பகுதி வழியாக வேகமாக வந்துகொண்டிருந்த இரண்டு கார்கள் டிப்பர் லாரி மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் டிப்பர் லாரி டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

தீவிபத்தில் ஒரு காரில் இருந்த 4 பேர் தீப்பற்றி எரிந்து காருக்குள்ளேயே சாம்பலாகினர். மற்றொரு காரில் இருந்த மூன்று பேர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

விபத்தில் சிக்கிய கார்களில் இருந்தவர்கள் செம்மரக்கடத்தல் கூலிகளாக இருக்கலாம் என்றும், அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. விபத்தில் சிக்கி எரிந்த கார் ஒன்றில் ஏராளமான அளவில் செம்மரக்கட்டைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடப்பா போலீசார் காரில் இருந்தவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தற்போது விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 20

0

0