தாதா முக்தர் அன்சாரியின் நெருங்கிய கூட்டாளிகள் என்கவுண்டர்..! உத்தரபிரதேச போலீசார் அதிரடி..!

4 March 2021, 1:39 pm
UP_STF_kills_two_shooters_of_Mukhtar_Ansari_gang_UpdateNews360
Quick Share

உத்தரப்பிரதேசத்தின் பிரயாகராஜ் மாவட்டத்தின் அரேலில் நடந்த ஒரு மோதலில் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு போலீஸ் படை இரண்டு தேடப்படும் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

என்கவுண்டர் செய்யப்பட்ட இருவரும் வக்கீல் விகாஸ் பாண்டே மற்றும் அம்சாத் என அடையாளம் காணப்பட்டனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, பாண்டே மற்றும் அம்சாத் ஆகியோர் தாதாக்களான முன்னா பஜ்ரங்கி மற்றும் முக்தார் அன்சாரி ஆகியோருடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிகிறது.

முன்னா பஜ்ரங்கி மற்றும் முக்தார் அன்சாரி ஆகியோரின் உத்தரவின் பேரில் அப்போதைய துணை ஜெயிலர் அனில் குமார் தியாகியின் 2013 கொலை வழக்கில் பாண்டே மற்றும் அம்சாத் ஆகியோர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சஹாஸ் ராம் பாண்டேயின் மகன் விகாஸ் பாண்டே எனும் ராஜீவ் பாண்டே, சாண்ட் ரவிதாஸ் நகர் மாவட்டத்தில் கோபிகஞ்சில் வசிப்பவர். அவர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ 50,000 ரொக்க வெகுமதி வழங்குவதாக உத்தரபிரதேச போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரயாகராஜின் நைனி காவல் நிலைய பகுதியில் உ.பி. பிரயாகராஜ் துணை போலீஸ் சூப்பிரண்டு நவேண்டு குமார் தலைமையிலான சிறப்பு போலீஸ் படை இருவரையும் சுற்றிவளைத்தபோது நடந்த மோதலில் இருவரும் கொல்லப்பட்டனர்.

Views: - 18

0

0