என்ன சிம்ரன் இதெல்லாம்….“காதலர்களாக மாறிய தோழிகள்“ : புது வாழ்க்கை தொடங்க வீட்டை விட்டு ஓட்டம்!!

5 November 2020, 1:48 pm
Lesbian - Updatenews360
Quick Share

ஆந்திரா : கர்னூல் நகரை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் ஒருவரை ஒருவர் காதலித்து புது வாழ்க்கை தொடங்குவதற்காக வீட்டை விட்டு ஓடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் சேர்ந்த காத்தூன் மகள் 20 வயது சிம்ரன். அதேபோல் பார்வதி அம்மா என்பவர் மகள் 21 வயது புஷ்பலதா. புஷ்பலதா படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சிம்ரன் கல்லூரியில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இளம் வயது முதல் இரண்டு பேரும் நண்பர்கள்.

இந்த நிலையில் அவர்களுக்கு இடையே இருந்த நட்பு காதல் மாறியது.இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்த இருவரும் இன்று புது வாழ்க்கையை துவங்க வீட்டை விட்டு வெளியேறினர்.

இதுபற்றி புஷ்பலதா, சிம்ரன் தாய் காத்தூனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி அடிப்படையில் காத்தூன், பார்வதி அம்மா ஆகியோர் கர்னூல் காவல்நிலையத்தில் தங்கள் மகள்களை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது புஷ்பலதா வீட்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் உடன் எடுத்து சென்றுள்ளார். சிம்ரன் தாய் காத்தூனுக்கு புஷ்பலதா அனுப்பிய குறுஞ்செய்தியில் தங்களது காதல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள கர்நூல் போலீசார் 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 18

0

0