ராஜஸ்தானில் கள்ள மார்க்கெட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனை கனஜோர்..! இரண்டு பேரைக் கைது செய்தது போலீஸ்..!

22 April 2021, 7:03 pm
oxygen_cylinders_updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அதிக தேவை உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ததாக ராஜஸ்தானின் கோட்டாவில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் இன்று தெரிவித்தனர்.

கோட்டா மாவட்டத்தின் ராம்கஞ்ச் மண்டி நகரில் இருந்து நேற்று இரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக ராம்கஞ்ச் மண்டி காவல் நிலைய அதிகாரி ஹரிஷ் பாரதி தெரிவித்தார்.

அவர்களது வாகனத்தில் இருந்து 35 ஆக்சிஜன் சிலிண்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரம் குறித்த முதற்கட்ட விசாரணையில், ஜலவர் மருத்துவக் கல்லூரியில் டெலிவரி செய்வதற்காக சித்தோர்கரில் உள்ள பிக்கப் வாகனத்தில் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் சில ஆக்சிஜன் சிலிண்டர்களை தனியார் கடைகளுக்கு அதிக விலைக்கு கொடுத்தார் என்று காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்

குற்றம் சாட்டப்பட்ட ஜாகிர் மற்றும் நனேஜ் மராத்தா ஆகியோர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Views: - 222

0

0