மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவின் போது துப்பாக்கி சூடு : பாதுகாப்பு வீரர்கள் 2 பேர் காயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2021, 11:37 am
WB election -Updatenews360
Quick Share

மேற்கு வங்கம் : பக்வான்ப்பூர் தொகுதியல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பக்வான்பூர் தொகுதியலி வாக்குப்பதிவு தொடங்கும் முன் வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து மர்மநபர்களை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் தடுத்தனர். இதில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். இதியடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சேர்ந்து சில மர்மநபர்கள் வாக்காளர்களை அச்சுறுத்தியதாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

Views: - 151

0

0