ஐஎஸ்ஐஎஸ் ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட இருவர் பெங்களூரில் கைது..! என்ஐஏ அதிரடி நடவடிக்கை..!

Author: Sekar
8 October 2020, 8:10 pm
Hand_Cup_Updatenews360
Quick Share

இளைஞர்களை தீவிரமயமாக்க மற்றும் பயங்கரவாத அமைப்பில் சேர்த்து சிரியாவுக்கு அனுப்ப அவர்களின் பயணத்திற்கு நிதியளித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறப்படும் பெங்களூரைத் தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அகமது அப்துல் காதர் மற்றும் பெங்களூரின் ஃபிரேசர் டவுனைச் சேர்ந்த இர்பான் நசீர் ஆகியோர் நேற்று என்ஐஏவால் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரில் ஒரு மருத்துவரை கைது செய்ததன் மூலம் பயங்கரவாத குழுவை என்ஐஏ கண்டுபிடித்த சில வாரங்களுக்குப் பிறகு என்ஐஏ இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, குருப்பனா பால்யா மற்றும் ஃப்ரேசர் டவுனில் உள்ள காதர் மற்றும் நசீர் வளாகத்தில் சோதனைகள் நடத்தியதுடன், அவர்கள் வைத்திருந்த பொருள் மற்றும் மின்னணு சாதனங்களையும் என்ஐஏ கைப்பற்றியுள்ளது.

காதர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வணிக ஆய்வாளராக உள்ள நிலையில், ​​நசீர் பெங்களூரில் ஒரு அரிசி வணிகராக வெளியுலகிற்கு காட்டிக்கொண்டு இந்த சாதி வேலையில் ஈடுபடுவதாக என்ஐஏ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பின்னர் இருவரும் பெங்களூரில் அமைந்துள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து நீதிமன்றம் 10 நாட்கள் என்ஐஏ காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் குரான் வட்டம் என்று ஒரு குழுவை அமைத்திருந்தனர். இது பெங்களூரில் முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதோடு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்கும் சிரியாவில் மோதல் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்பி பயிற்சி அளித்ததும் தெரிய வந்துள்ளது” என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

சிரியாவில் இதுபோன்ற பயிற்சிக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர் என்று என்ஐஏ கூறியது. இந்த வழக்கில் மேலதிக விசாரணைகள் பெரிய சதித்திட்டத்தை தொடர்ந்து கண்டறிந்து வருகின்றன என்று என்ஐஏ மேலும் தெரிவித்துள்ளது.

Views: - 43

0

0