பாதுகாவலனைப் போல நடிக்கும் பாக்., : ஐ.நா.வில் இம்ரான்கானை கிழித்தெடுத்த ஸ்னேகா துபே..!!! யார் இவர்..? (வீடியோ)

Author: Babu Lakshmanan
25 September 2021, 1:25 pm
Snegha dubey - imran khan- updatenews360
Quick Share

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானின் உண்மை முகத்தை இந்திய முதன்மைச் செயலாளர் ஸ்னேகா துபே அம்பலப்படுத்திய பேச்சுக்கள் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொதுச் சபைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில், அனைத்து நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்று பேசி வருகின்றனர். இக் கூட்டத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பேசிய இந்தியாவின் முதன்மை செயலாளர் சினேகா துபோ, பாகிஸ்தானையும், அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கானையும் வெளுத்து வாங்கினார்.

அவர் பேசியதாவது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா முறையாகக் கையாளவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருந்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் அது இந்திய பகுதியாகவேத்தான் இருக்கும்.

பாகிஸ்தான் தன்னை பாதுகாவலனாக காட்டிக் கொண்டாலும், அனைத்துக் குழப்பங்களுக்கும் அவர்கள்தான் காரணம். பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளை ஒடுக்கும் நடவடிக்கைகளையே அந்த நாட்டு அரசு எடுத்து வருகிறது.

பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தான், பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, அடைக்கலம், நிதியுதவி ஆகியவற்றை பாகிஸ்தான் வழங்கி உதவி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஒசேமா பின்லேடன் பாகிஸ்தானில்தான் தஞ்சம் புகுந்திருந்தார். தற்போதும் கூட அவரை தியாகியாகவே கூறி வருகிறது.

பயங்கரவாதிகள் அண்டை நாடுகளுக்கு மட்டுமே தீங்கு விளைவிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான், கொல்லைப்புறத்தில் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் வளர்த்து வருகிறது. இதனால், இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளே பாதிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல், பாகிஸ்தானில் நடக்கும் மதவன்முறைகளை, பயங்கரவாத செயல்களாக மறைக்கிறது.

Pakistan_flag_UpdateNews360

ஐநா சபையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தலைவர் இந்தியாவுக்கு எதிராக பொய்யான தகவல்களை தெரிவிப்பது இது முதல்முறையல்ல. பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்து கொண்டு, உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தானைப் போல இல்லாமல், இந்தியா சுதந்திர ஊடகங்களையும் சுதந்திரமான நீதித்துறை அமைப்பையும் கொண்ட நாடு. இவை தான் நமது அரசியலமைப்பைக் கண்காணித்து, பாதுகாக்கிறது. பாகிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சாதாரண உறவையே இந்தியா விரும்புகிறது, எனக் கூறினார்.

ஐநாவில் அவர் பேசிய இந்தப் பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Views: - 391

0

0