உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை காஷ்மீர் பயணம்: பாதுகாப்பு சூழ்நிலை குறித்து ஆய்வு

Author: kavin kumar
22 October 2021, 9:14 pm
Amit_Shah_UpdateNews360
Quick Share

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக நாளை காஷ்மீர் செல்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் இம்மாத தொடக்கத்திலிருந்தே பொதுமக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் இதுவரை 11 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஐந்து பேர் வெளிமாநிலத்தவர் ஆவர். இதனால் ஜம்மு காஷ்மீரிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் உயிருக்குப் பயந்து வெளியேறி வருகின்றனர்.அதேபோல் காவல்துறையினரும் புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பு முகாம்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதற்கிடையே குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை ஒடுக்கப் பாதுகாப்புப் படையினர் களமிறங்கியுள்ளனர்.

இருவருக்குமிடையேயான மோதலில் இதுவரை சில தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். சில பாதுகாப்புப் படை வீரர்களும் வீர மரணமடைந்துள்ளார். இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக நாளை ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார். இந்த பயணத்தின் பொழுது ஸ்ரீநகர் மற்றும் ஷார்ஜா இடையே நேரடியான முதல் சர்வதேச விமானத்தை தொடங்கி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அவர் பாதுகாப்பு சூழ்நிலையை ஆய்வு செய்வதுடன், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநருடனும் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

Views: - 318

0

0