‘உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைந்திருப்பேன்’: சர்ச்சையை கிளப்பிய மத்திய அமைச்சர் நாராயண் ரானே அதிரடி கைது..!!
Author: Aarthi Sivakumar24 August 2021, 4:21 pm
மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைந்திருப்பேன் என அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று சொன்ன மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
“சுதந்திர ஆண்டை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறியாதது வெட்கக்கேடானது… அவர் தனது உரையின் போது சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று உதவியாளரிடம் கேட்டு அப்புறம் சொல்கிறார். நான் மட்டும் அங்கு இருந்திருந்தால், ஒரு அறை கொடுத்திருப்பேன்” என்று என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதனையடுத்து, உத்தவ் தாக்கரேவை அவமதித்ததாக கூறி, சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். மும்பை, நாசிக், புனே பகுதிகளில் பாஜக அலுவலங்கள் மீது சிவசேனா தொண்டர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவதூறு புகாரின் அடிப்படையில் நாசிக் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை சதுர்ஷிரிங்கி போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய அமைச்சரை சிவசேனா கட்சி கைது செய்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
0
0