ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் சவால்….’அரசியலை விட்டு விலகுகிறேன்’…!!!

Author: Aarthi
12 October 2020, 12:05 pm
central minister gajendra- updatenews360
Quick Share

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியால் ஒரு பயிரை அதன் செடிகள் மூலம் அடையாளம் காண முடிந்தால், நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சவால் விடுத்துள்ளார்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு கடந்த மாதம் 27ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த மசோதாக்கள் சட்டமாக மாறின.

raghul-priya-1-updatenews360

இந்த வேளாண் சட்டங்களுக்கு, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் மீது மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கடுமையான தாக்குதலைத் தொடுத்து உள்ளார். மேலும் நாட்டில் விவசாயிகளை ‘தவறாக வழிநடத்தியதாக’ குற்றம் சாட்டியுள்ளார்.

tractor-raghul-updatenews360

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு ஆடு மற்றும் செம்மறி ஆடுகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்றும், சகோதர-சகோதரிக்கு விவசாய நிலங்களில் உள்ள செடிகள் மூலம் பயிரை அடையாளம் காண முடிந்தால் நான் அரசியலை விட்டு விலகத்தயார் எனவும் அதிரடியாக சவால் விட்டுள்ளார்.

Views: - 40

0

0