திருப்பதி ஏழுமலையான தரிசித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் : பாபவிநாசம் அணை ஆய்வு!!

Author: Udayachandran
3 October 2020, 2:17 pm
Tirupati Minsiter Dharshan - updatenews360
Quick Share

திருப்பதி : மாநில அரசு முறையாக விண்ணப்பித்தால் திருப்பதி மலையில் தண்ணீர் தேவைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சிக்கும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். அவருடன் ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் அனில் குமார் யாதவ் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபாடு செய்தார்.

சாமி கும்பிட்ட பின் இரண்டு பேருக்கும் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் அனில்குமார் யாதவ் ஆகியோர் திருப்பதி மலையில் உள்ள பாபவிநாசம் அணையை ஆய்வு செய்தனர்.

அப்போது திருப்பதி அருகே பாலாஜி ரிசர்வாயர் என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் நீர்தேக்கத்தில் இருந்து திருப்பதி மலைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கொண்டு செல்ல தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் குமார் யாதவ் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அப்போது ஆந்திர மாநில அரசு முறையாக விண்ணப்பித்தால் பரிசீலனை செய்து ஆவண செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.

Views: - 40

0

0