திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த மத்திய அமைச்சர் : உத்தரபிரதேசத்தில் பாஜக வெற்றி பெற சிறப்பு வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2022, 11:55 am
Tirupati Bjp Central Minister -Updatenews360
Quick Share

திருப்பதி : திருப்பதி மலைக்கு வந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே ஏமலையானை வழிபட்டார்.

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசிர்வாதம் ஆகியவை வழங்கப்பட்டன.

தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர், உத்தரபிரதேச மாநிலத்துடன் எனக்கு நான்கு ஆண்டுகால நெருங்கிய தொடர்பு உள்ளது. அங்கு பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஏழுமலையானை வேண்டிக் கொண்டேன் என்று கூறினார்.

Views: - 375

0

0