மரத்தில் இலை பறித்ததற்காக தாக்கப்பட்டதால் விரக்தி..! தற்கொலை செய்து கொண்ட தலித் இளைஞர்..!

Author: Sekar
30 December 2020, 5:57 pm
Death_UpdateNews360
Quick Share

26 வயதான தலித் இளைஞர் ஒருவர் உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாமரத்திலிருந்து இலைகளை பறித்ததற்காக சிலரால் தாக்கப்பட்டதில் வருத்தமடைந்து இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று மல்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆஸ்தா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தாரம்பல் திவாகர் எனும் தலித் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல் நிலைய அதிகாரி ஷெர் சிங் ராஜ்புத் இன்று தெரிவித்தார்.

கிராமத்தில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாமரத்திலிருந்து இலைகளை பறித்ததாக அவர் சிலரால் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வீடு திரும்பிய பின்னர், திவாகர் தன்னுடைய அறைக்குள் சென்று பூட்டியதோடு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இறந்தவரின் குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக மூன்று பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

Views: - 79

0

0