திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் நடந்த ஆணவக் கொலை..! பரபர பின்னணி..!

26 January 2021, 6:32 pm
Gun_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், திருமணமாகவிருந்த 24 மணி நேரத்திற்குள் ஒரு இளம் பெண்ணை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நகரின் லிசாரி கேட் காவல் நிலையத்தின் கீழ் உள்ள இஸ்லாமாபாத் பகுதியில் நடந்தது.

பலியான பெண், தனது சகோதரியின் மைத்துனர் காசிமை காதலித்து வந்துள்ளார். அவர் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் குர்ஜாவில் வசித்து வந்துள்ளார்.

இருவரும் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உறவில் இருந்தனர். பெண்ணின் குடும்பத்தினர் இது குறித்து அறிந்ததும், அவர்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு காசிமிடம் கேட்டார்கள்.

இருப்பினும், காசிம் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதற்குப் பிறகு, அந்தப் பெண்ணிற்கு மீரட்டில் வேறொரு ஆணுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. நேற்று திருமணம் நடைபெற இருந்தது.  

ஆனால், அவரது காதலன் காசிம் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியில் விட்டுள்ளார். இதனால் கோபமடைந்த இளம் பெண்ணின் சகோதரர், திருமணத்திற்கு சற்று முன்பு அவரை சுட்டுக் கொன்றார்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

“அந்த நபர் தனது சகோதரி விவகாரம் மற்றும் வைரல் ஆன ஆட்சேபகரமான புகைப்படங்கள் பற்றி அறிந்த பிறகு கொலை செய்துள்ளார். நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளோம், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.” கோட்வாலியின் வட்ட அலுவலர் அரவிந்த் சவுராசியா கூறினார்.

Views: - 0

0

0