கட்டு விரியன் பாம்பை கடித்து விழுங்க முயன்ற ஒரு வயது குழந்தை!!

6 September 2020, 3:04 pm
Child Swallow Snkae - Updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் : அதிக விஷமுள்ள கட்டு விரியன் பாம்பை விழுங்க முயன்ற ஒரு வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

உத்தரபிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள போலாப்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வயது குழந்தை ஒன்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த குட்டிப் பாம்பை பிடித்த சிறுவன் அதை வாயில் எடுத்து கடித்துள்ளான்.

இதைக் கண்ட தாய் பதறியடித்து ஓடி வந்து வாயில் கடித்த பாம்பை எடுத்து தூரம் எறிந்துள்ளார். ஆனால் அந்த பாம்பு இறந்திருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் குழந்தையை தாய் அழைத்துச் சென்றார்.

குழந்தை கடித்தது அதிக விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு என்பதால் குழந்தை விஷம் கலந்துள்ளதாக என சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தைக்கு விஷ எதிர்ப்பு சக்தி ஊசியை செலுத்தி தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணித்து வருகின்றனர்.

Views: - 0

0

0