பாக்., வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பாயும் : உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
28 October 2021, 11:33 am
yogi warn- updatenews360
Quick Share

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பாயும் என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்12 சுற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப்2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெறும் முதல் வெற்றி இதுவாகும். எனவே, இந்த வரலாற்று வெற்றியை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர்.

இதனால், இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் தற்போதும் ஓய்ந்த பாடில்லை. இதனிடையே, காஷ்மீரில் இந்திய அணியின் தோல்வியை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆசிரியை பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் பாக்., வெற்றியை கொண்டாடிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பாயும் என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 348

0

0