பெண்ணை ஈவ் டீசிங் செய்த காங்கிரஸ் தலைவர்..! நடு ரோட்டில் செருப்பால் அடித்த பெண்கள்..!

2 November 2020, 2:23 pm
jalaun_congress_leader_updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் ஜலான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அனுராக் மிஸ்ராவை நேற்று இரண்டு பெண்கள் செருப்பால் அடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. எனினும் காங்கிரஸ் தலைவர் இந்த குற்றச்சாட்டை மறுத்து, தனது பிம்பத்தை கெடுக்கும் ஒரு சதி என்று குறிப்பிட்டார்.

போலீஸ் சூப்பிரண்டு யஷ்வீர் சிங் கூறுகையில், அதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து போலீசார் இந்த விஷயத்தை விசாரிப்பதாகக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தாக்குதல் நடத்திய பெண்களில் ஒருவர் கட்சியின் பெண்கள் பிரிவின் அலுவலக பொறுப்பாளராக இருந்ததாகவும், மூத்த தலைவர்களின் பரிந்துரையின் பேரில் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் கோபமடைந்தது தாக்கியதாகவும் மிஸ்ரா கூறினார்.

காங்கிரஸ் தலைவர் அனுராக் மிஸ்ரா மேலும், வீடியோவில் காணப்படும் பெண் வீடுகட்ட பணம் கொடுத்திருந்ததாகவும், அதை திரும்பக் கேட்டபோது, அவர் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், காவல்துறை இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக ஓராய் வட்ட அலுவலர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் முழு விவகாரமும் விசாரிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையே உத்தரபிரதேச காங்கிரசும் இந்த விவகாரத்தை ஆராய ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

அனுராக் மிஸ்ராவுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, ஐந்து பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்குச் சென்று சம்பவம் குறித்த தகவல்களைப் பெறுவதாக உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளரான நிர்வாகி சித்தார்த்தப்ரி ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

Views: - 49

0

0