முகக்கவசம் அணியாத ரயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளி!! உ.பியில் பரபரப்பு!!

Author: Udhayakumar Raman
26 June 2021, 8:11 pm
Quick Share

உத்தரப்பிரதேசத்தில் முக கவசம் அணியாமல் சென்ற ரயில்வே ஊழியரைதுப்பாக்கியால் சுட்ட வங்கி காவலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளைக்குள் முக கவசம் இன்றி நுழைய முயன்ற ரயில்வே ஊழியர் ராஜேஷ் குமாரை, வங்கி காவலாளி கேசவ் பிரசாத் மிஷ்ரா தடுத்து நிறுத்தி, உள்ளே அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார். இதனால், ரயில்வே ஊழியருக்கும் வங்கி காவலாளிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, ராஜேஷ் குமாரின் மனைவி அவரை சமாதானப்படுத்தி அருகிலிருந்த கடைக்குச் சென்று முககவசம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதன் பின்பு முகக்கவசம் அணிந்து வந்த போதும் உள்ளே அனுமதிக்க முடியாது என கூறி, ராஜேஷ் குமாரை வங்கி காவலாளி அவமதித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. திடீரென ரயில்வே ஊழியரை கீழே தள்ளிவிட்ட வங்கி காவலாளி, தாம் வைத்திருந்த துப்பாக்கியால் அவரது காலில் சுட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த ரயில்வே ஊழியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வங்கி காவலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 266

0

0