இப்படியா செய்வீங்க போட்டோஷாப் பாய்ஸ்; வச்சு செஞ்ச நெட்டிசன்ஸ்

13 January 2021, 9:02 am
Quick Share

குற்றவாளி ஒருவரை கைது செய்த போலீசார், மாஸ்க் போடாமல் இருந்த அவர்களுக்கு, போட்டோஷாப் மூலம் மாஸ்க் அணிவித்து அதனை டுவிட்டரில் பதிவிட, நெட்டிசன்கள் வாய்க்கு அவல் போட்டது போல் ஆனது.

கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலும், மாஸ்க் அணிவதும் அவசியம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மாஸ்க் அணிவது கட்டாயம் எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநில அரசுகள் சட்டம் இயற்றி உள்ளன. ஆனால் நம் மக்கள் கேட்பார்களா.. சட்டத்தை மீறுவதில் இருக்கும் இன்பம் அவர்களுக்கு அலாதியானது போல…

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், மாஸ்க் அணியாமல் இருக்கும் குற்றவாளி ஒருவரை கைது செய்த போலீசார், மாஸ்க் போடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அவர்கள் இருவருக்கும், போட்டோஷாப் மூலம் மாஸ்க் அணிவித்த உத்திரபிரதேச போலீசார், அதனை தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். போட்டோஷாப் மூலம் மாஸ்க் வைத்திருப்பது அப்பட்டமாக தெரிய, நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா என்ன…

போட்டோஷாப் பயன்படுத்தி இருப்பது, தெரியாத வகையில் நுட்பமாக இருந்தால் கூட பரவாயில்லை. ஜூம் பண்ணி பார்க்காமல், வெளிப்படையாகவே தெரியும் வகையில் மாஸ்க் வைக்கப்பட்டிருப்பதை கண்டு சிரிப்பு தான் வந்தது நெட்டிசன்களுக்கு.. அதனை வைத்து பல மீம்ஸ்களையும் தயார் செய்து கலாய்த்து வருகின்றனர். இது வைரலான நிலையில், இந்த போட்டோவை, டுவிட்டரிலிருந்து உத்திர பிரதேச போலீசார் நீக்கி விட்டனர்.

இருப்பினும், ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதனை தொடர்ந்து இன்டர்நெட்டில் வலம் வர வைத்துள்ளனர் டுவிட்டர்வாசிகள். இந்த மீம்ஸ்களுக்கு எல்லாம் சிரிப்பு எமோஜிக்கள் குவிந்ததுடன், கமெண்டுகளையும் தெரிக்கவிட, கலைகட்டியது இன்டர்நெட். கடந்த ஆண்டு மே மாதம் இதே போன்று, போட்டோஷாப் பயன்படுத்திய உத்திர பிரதேச போலீசார், நெட்டிசன்களிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Views: - 17

0

0