கான்ஸ்டபிளை நம்பி கணவனை கைவிட்ட பெண் போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலைக்கு முயற்சி..!

27 January 2021, 4:32 pm
police_officer_arrested_updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடன் பணிபுரியும் ஆண் காவலர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து, பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் பின்வாங்கியதை அடுத்து பெண் கான்ஸ்டபிள் தற்கொலைக்கு முயன்றார். தனது புகாரில், பெண் கான்ஸ்டபிள், ஆண் கான்ஸ்டபிளுடன் ஒரே காவல்நிலையத்தில் பணிபுரிவதாகக் கூறி, அவருடனேயே வாடகைக்கு தங்கியிருப்பதாகக் கூறினார்.

“2020 மே மாதம் ஒரு நாள், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த பின்னர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் திருமணம் செய்வதாகக் கூறி, அவர் தொடர்ந்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.” என்று பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் தனது எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டார்.

மேலும் தன்னை திருமணம் செய்வதாக போலியாகக் காரணம் கூறி, ஹரித்வாரிற்கு அழைத்துச் சென்று ஒரு ஹோட்டலில் இரண்டு நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் தற்போது குற்றம் சாட்டப்பட்ட ஆண் கான்ஸ்டபிள் தன்னை திருமணம் செய்ய மறுத்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

முன்னதாக பெண் கான்ஸ்டபிள், சம்பந்தப்பட்ட ஆண் கான்ஸ்டபிள் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவரின் ஆலோசனையின் பேரில் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதாகக் கூறினார்.

Views: - 0

0

0