ஆயிரம் ரூபாய் திருட போன இடத்தில் ரூ.7 லட்சம்! திருடனுக்கு வந்தது ஹார்ட் அட்டாக்

3 April 2021, 10:45 am
Quick Share

உத்திர பிரதேசத்தில் சர்வீஸ் சென்டர் ஒன்றில் திருட போன கொள்ளையர்கள் இருவரில் ஒருவருக்கு, அங்கு அதிக பணம் இருந்ததால் ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. திருடிய பணத்திலேயே அவர் அதற்காக சிகிச்சை எடுத்து கொண்டு தற்போது போலீசில் பிடிபட்டிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோட்வாலி டெகாட் பகுதியில், நவாப் ஹைதர் என்பவர் சர்வீஸ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் 16ஆம் தேதி, அவரது கடையில் நுழைந்த கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்றிருக்கின்றனர். இதுகுறித்து போலீசில் நவாப் புகார் அளித்திருக்கிறார். புகாரில் தனது கடையில் இருந்து ரூ.7 லட்சம் திருடு போய்விட்டதாக தெரிவித்திருக்கிறார். போலீசார் திருடர்களை தேடி வந்த நிலையில், கடந்த புதன்கிழமை அலிப்பூர் பகுதியில், நவுஸத், இஜாஸ் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் தான் நவாப் கடையில் கொள்ளை அடித்ததை உறுதி செய்தனர்.

பணம் குறித்து கேட்ட போலீசார், அவர்கள் கூறிய கதையை கேட்டு ஆடிப்போயிருக்கின்றனர். கொள்ளையடிக்க போன இடத்தில் ஆயிரம், இரண்டாயிரம் இருக்கும் என்ற எண்ணத்தில் திருடர்கள் இருவரும் அந்த கடைக்கு சென்றிருக்கின்றனர். அங்கு ரூ.7 லட்சம் இருப்பதை கண்ட, திருடர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. பணத்தை திருடி, நேரடியாக மருத்துவமனை சென்று அவர் சிகிச்சை எடுத்து கொண்டார். சிகிச்சைக்கு அதிகமான பணம் செலவாகி இருக்கிறது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்திருக்கின்றனர்.

Views: - 0

0

2