கங்கையில் மேலும் இரண்டு சடலங்கள் மீட்பு..! கொரோனா நோயாளிகளா என மக்கள் அச்சம்..!

17 May 2021, 8:47 pm
Dead_Bodies_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் கங்கை நதிக் கரையில் ஒரு கிராமத்தில் இரண்டு சடலங்கள் காணப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். கடந்த வாரம், பல்லியா குடியிருப்பாளர்கள் மாவட்டத்தில் ஆற்றில் 50’க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதைக் கண்டதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நேற்று காணப்பட்ட இரண்டு சடலங்களும் கொரோனா நோயாளிகளா என்ற சந்தேகத்தைத் தூண்டின. இரண்டு சடலங்களும் நேற்று பெபனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மால்தேபூர் கிராமத்தில் காணப்பட்டன. அவற்றின் இறுதி சடங்குகள் இன்று செய்யப்பட்டன என்று பகுதி காவல்நிலைய அதிகாரி சஞ்சய் திரிபாதி தெரிவித்தார்.

இரண்டு உடல்களில் ஒன்று பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

காவல்துறையினர் இங்கு ஆற்றில் ரோந்து செல்லத் தொடங்கியுள்ளனர் மற்றும் கங்கையில் சடலங்களை அப்புறப்படுத்த வேண்டாம் என்று கிராமவாசிகளிடம் கூறியுள்ளனர்.

மாகாண ஆயுத போலீசாரும் (பிஏசி) வெள்ளப் பிரிவும் ஆற்றில் ரோந்து வருவதாக திரிபாதி கூறினார்.

“கிராமங்களில் ஆற்றங்கரையின் அருகே வசிக்கும் மக்கள், இறுதி சடங்குகளைச் செய்வதில் யாராவது சிரமத்தை எதிர்கொண்டால், அவர்கள் காவல்துறை அல்லது மாவட்ட நிர்வாகத்தின் உதவியைப் பெறலாம்” என்று திரிபாதி கூறினார்.

Views: - 84

0

0