பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம்: 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது…!!

Author: Aarthi Sivakumar
20 August 2021, 1:48 pm
Quick Share

ஆந்திரா மாநிலத்தில் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கில் 2 சிறார்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்ததாக அலிபிரி காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், ஹைதராபாத்தை சேர்ந்த அரவிந்த், நாகராஜ், நரேஷ் மற்றும் இரண்டு சிறார்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி மாவட்ட எஸ்.பி., இது போன்று தவறான செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் தைரியமுடன் புகார் அளிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Views: - 294

0

0