இன்று முதல் 7 பிராண்டுகளில் ஊதுபத்தி விற்பனை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் துவக்கியது!!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2021, 2:41 pm
Tirupati AGarpathi Sales -Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி மலையில் ஏழு பிராண்ட்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் ஊது பத்திகள் விற்பனையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் துவக்கியது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனக்கு சொந்தமாக இருக்கும் கோவில்களில் பயன்படுத்தப்படும் மலர்களை பயன்படுத்தி ஊது பத்திகளை தயார்செய்து பக்தர்களிடம் விற்பனை செய்ய முடிவு செய்தது.

இந்த நிலையில் இன்று முதல் ஊதுபத்தி விற்பனையை திருமலை, திருப்பதி, திருச்சானூர் ஆகிய ஊர்களில் ஆலய வளாகங்களில் பக்தர்களுக்கு விற்பனையை தேவஸ்தானம் துவக்கியது .

திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலையில் ஊதுபத்தி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் ஆகிய கோவில்கள் உட்பட தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் சாமி அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் மலர்களை கோசாலையில் அமைக்கப்பட்டுள்ள ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கொண்டு வந்து அவற்றை நன்றாக காய வைத்து இயந்திரம் மூலம் இடித்து பொடி செய்கின்றனர். பின்னர் அந்தப் பொடியை மற்றொரு இயந்திரத்தில் கொட்டி அதனுடன் வேறு சில பொருட்களைக் கலந்து ஊதுபத்தி தயார் செய்கின்றனர். பின்னர் வேறொரு இயந்திரத்தில் தயார் செய்யப்பட்ட ஊதுபத்திகளை காயவைத்து அவற்றின்மீது நறுமண கலவையை தெளிக்கப்படுகிறது.

பின்னர் மீண்டும் மற்றொரு இயந்திரம் மூலம் காய வைக்கப்படும் ஊதுபத்திகள் ஏழு பிராண்டுகளில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று முதல் முதல் தந்தனானா, திவ்யபாதா, துஷ்த்தி, துருஷ்ததி, அபயஹஷ்தா, சிருஷ்த்தி, ஆக்குருஷ்த்தி ஆகிய 7 பிராண்டுகளில் தினமும் மூன்றரை லட்சம் ஊதுபத்திகளை தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களிடையே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

தலா ரூ.45 மற்றும் 85 ரூபாய் ஆகிய விலைகளில் விற்பனைக்கு வந்துள்ள ஊதுபத்தி விற்பனையை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் திருப்பதி மலையில் இன்று துவக்கி வைத்தனர்.

Views: - 225

0

0