முடிந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள்: பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்…!!!

26 October 2020, 12:04 pm
Uthav thakrey 01 updatenews360
Quick Share

பீகாருக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கையை உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.

சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி மும்பை தாதர் பகுதியில் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மிகப்பெரிய அளவில் நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே நடத்தப்பட்டது.

இந்த பேரணியில் சிவசேனா தலைவரும், மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே பங்கேற்றார். அப்போது பேசிய அவர், எனது அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆகிவிட்டது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது இந்த அரசு விரைவில் கவிழ்ந்து விடும் எனக்கூறினர்.

துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள் என அவர்களுக்கு நான் சவால் விடுக்கிறேன். முன்பெல்லாம், மாற்றுக் காரணி ஏதும் இல்லை என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது உங்களைத் தவிர்த்து வேறு யார் வேண்டுமாலும் செய்வார்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

Views: - 22

0

0