டெல்லி பயணமானார் உ.பி. முதலமைச்சர் யோகி: நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்..!!

10 June 2021, 3:15 pm
Quick Share

புதுடெல்லி: உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று டெல்லி சென்றுள்ள நிலையில், நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

உத்தரபிரதேச முதலமைச்சராக செயல்பட்டு வருபவர் யோகி ஆதித்யநாத். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 5ம் தேதி தனது 49வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவரது பிறந்தநாளுக்கு அம்மாநில அரசியல் கட்சியினர் யோகி ஆதியநாத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Modi_Meeting_UpdateNews360

ஆனால், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட முக்கிய பாஜகவினர் யோகி ஆதித்யநாத்திற்கு தங்கள் டுவிட்டர் பக்கம் மூலம் வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் பாஜக கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2022ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

கொரோனாவை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் யோகி ஆதித்யநாத் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் வரும் தேர்தலில் யோகி ஆதித்தநாத்திற்கு பதிலாக வேறு நபரை முதலமைச்சராக வேட்பாளராக அறிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

ஆனால், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ் தான் சந்திக்கும் என்று அம்மாநில பாஜக தலைவர் சுவேந்திர தேவ் சிங் நேற்று முன் தினம் தெரிவித்தார். இதன் மூலம், 2022 நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் மீண்டும் களமிறங்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Yogi_Adityanath_UpdateNews360

ஆனால், யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ் வரும் தேர்தலை சந்திக்க அம்மாநில பாஜக தலைவர்கள் பலர் விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உத்தரபிரதேச பாஜக கட்சியினர் இடையே குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பரபரப்பான சூழ்நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று டெல்லி சென்றுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள யோகி ஆதித்யநாத் உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று சந்திக்கிறார். மேலும், யோகி ஆதித்யநாத் நாளை பிரதமர் மோடி மற்றும் ஜேபி நட்டாவை சந்திக்கிறார். பாஜக தலைமை யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உடனான அவரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Views: - 143

0

0