400 படுக்கைகளைக் கொண்ட கொரோனா மருத்துவமனை..! நொய்டாவில் திறந்து வைத்தார் யோகி ஆதித்யநாத்..!

8 August 2020, 1:46 pm
Yogi_Noida_Covid_Hospital_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நொய்டா, செக்டர் 39’இல் 400 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனையை திறந்து வைத்தார்.

இதற்கிடையில், மாவட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வருகையின் காரணமாக 144 தடையுத்தரவு நொய்டாவில் விதிக்கப்பட்டுள்ளது.

“முதல்வரின் வருகையை ஒட்டி நொய்டா மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்க அனுமதிக்கப்படவில்லை. 15 கெஜட்டட் அதிகாரிகள் மற்றும் கடமையில் உள்ள 700 கான்ஸ்டபிள்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது” என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று, யோகி ஆதித்யநாத், மாவட்டத்தில் கொரோனாவின் நிலைமை குறித்து கௌதம் புத்தா நகரில் மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார்.

தற்போதுள்ள சுகாதார உள்கட்டமைப்பை வழிநடத்தவும் கூடுதலாகவும் சஞ்சய் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழுக்களை கான்பூர் நகருக்கு அனுப்புமாறு அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

கௌதம் புத்தா நகரில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 5,806’ஆக உயர்ந்துள்ளது, இதில் 906 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மேலும் 4,857 பேர் நோய்த்தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 43 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 1,13,378 கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன. இதில் 44,563 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 66,834 நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் மற்றும் 1,918 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.