லக்கிம்பூர் போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: குடியரசுத் தலைவரை சந்திக்க காங்கிரஸ் முடிவு..!!

Author: Aarthi Sivakumar
10 October 2021, 5:23 pm
Quick Share

லக்னோ: லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் மேலும் 6 பேர் பலியாகினர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று அஜய் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேச வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உத்தர பிரதேச விவசாயிகள் வன்முறை சம்பவம் குறித்து உண்மைகள் அடங்கிய அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் வழங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக குடியரசுத்லைவரை சந்திக்க காங்கிரஸ் கட்சி நேரம் கேட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் 7 பேர் கொண்ட குழு குடியரசுத்லைவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளது.

Views: - 590

0

0