தொடர்ந்து அதிகாரிக்கும் கொரோனா: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

Author: Udhayakumar Raman
20 September 2021, 10:04 pm
Delhi_Lockdown_UpdateNews360
Quick Share

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கு அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சர்த்கம் யாத்திரை நடத்த அம்மாநில ஐகோர்ட்டு அனுமதியளித்தது. இதனை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் ஹரித்வார் வந்தவண்ணம் உள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை காலை 6 மணி முதல் அக்டோபர் 5-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Views: - 120

0

0