மேலும் இரண்டு சடலங்கள் மீட்பு..! உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பில் பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு..!

23 February 2021, 12:40 pm
Chamoli_Glacier_Burst_UpdateNews360
Quick Share

மேலும் இரண்டு சடலங்கள் குப்பைகளுடையில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70’ஐ எட்டியுள்ளது. 

உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை வெடிப்பால் ஆறுகளில் வெள்ளப்பருக்கு ஏற்பட்டதோடு, என்டிபிசியின் ரிஷிகங்கா நீர்மின் திட்டத்திற்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கால் நீர்மின் திட்டத்தில் பணிபுரிந்த பல தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை உள்ளிட்ட பல அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், “பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேற்று கிடைத்த தகவல்களின்படி, ஒரு சடலம் ஸ்ரீநகர் சவுரஸிடமிருந்தும், ஒரு சடலம் கீர்த்தி நகரில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது. 206 தொழிலாளர்களில் 70 பேரின் இறந்த சடலங்கள் மற்றும் 29 பேர் உயிருடனும் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்” என்று உத்தரகண்ட் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், காணாமல் போன 134 பேரின் மீட்பு மற்றும் தேடுதல் பணி நடந்து வருகிறது.

Views: - 0

0

0

Leave a Reply