கடவுள் சிவனின் கோபத்தால்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் : சுப்பிரமணியசுவாமி டுவிட்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 8:50 pm
Su Samy Twit-Updatenews360
Quick Share

உத்தராகண்ட் வெள்ளப் பாதிப்புக்கு காரணம் கடவுள் சிவனின் கோபம் என்று சுப்பிரமணிய சுவாமி பதிவிட்டுள்ளார்.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 10 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை உத்தரகாண்டில் பெய்த மழையால் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக காணப்படுகிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், உத்தராகண்ட் வெள்ளப் பாதிப்புக்கு காரணம் கடவுள் சிவனின் கோபம் என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 281

0

0