பேருந்து – சொகுசு கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; 9 பேர் உடல்நசுங்கி பலி..!

17 October 2020, 5:37 pm
UP accident - updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் : உத்தரபிரதேசத்தில் பேருந்தும், சொகுசு காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிலிபிட் மாவட்டத்தின் புரன்பூர் பகுதியில் பேருந்து ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே அசுர வேகத்தில் காரும் சீறிப் பாய்ந்து வந்தது. யாரும் எதிர்பார்க்காத நிலையில், இரண்டும் நேருக்கு நேர் பயங்கரமா மோதியது. இதில், சொகுசு கார் பலத்த சேதம் அடைந்தது.

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. அதில், 9 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply