‘இது எல்லாம் ரொம்ப ஓவரு’… டாக்ஸி ஓட்டுநரை எகிறி எகிறி அடித்த இளம்பெண்… தடுக்க வந்தவரின் சட்டையும் டார்டாரு..!! (வீடியோ)

Author: Babu
2 August 2021, 4:40 pm
luckdow girl 1- updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் போலீசார் முன்னிலையில் டாக்ஸி ஓட்டுநரையும், சண்டையை தடுக்க வந்த நபரையும் இளம்பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள அவாத் கிராஸிங் பகுதியில், காவலர் முன்னிலையில் பெண் ஒருவர் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை போட்டு சரமாரியாக அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் தெரியாத நிலையில், டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருக்கும் அந்தப் பெண், டாக்ஸி ஓட்டுநரின் கன்னத்திலும், முகத்திலும் மாறி மாறி தாக்குகிறார். உயரம் குறைவாக இருந்த போதிலும் எகிறி எகிறி அடித்தார்.

அவர் எதற்காக இப்படி அடிக்கிறார்..? எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் டாக்ஸி ஓட்டுநர் அடி வாங்குவது ஏன்..? என்ற கேள்வி நமக்கு மட்டுமல்ல… சாலையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கும் புரியாத புதராகவே இருந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு கூட்டத்தில் இருந்த ஒரு நபர் அந்த டாக்ஸி ஓட்டுநரை அந்தப் பெண்ணின் பிடியில் இருந்து மீட்க முயன்றார். அப்போது, சமாதானம் அடையாத அந்தப் பெண், தடுக்க வந்தவரையும் தாக்கினார்.

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த கொடூர தாக்குதல் வீடியோ நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவலர் கண் முன்னே ஒரு பெண் மனிதாபிமானற்ற முறையில் இப்படியா நடந்து கொள்வது என்ற கேள்வியையும், அந்த இளம்பெண்ணை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர். #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக்குடன் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் போடப்பட்டு வருகிறது.

Views: - 286

0

0