ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

Author: kavin kumar
3 January 2022, 10:21 pm
Quick Share

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தொடங்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 25-ந் தேதியன்று பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது அவர் கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது என அறிவித்தார்.

இதன்படி இன்று சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தொடங்கியது. நாட்டில் 3-வது அலை பரவலுக்கு மத்தியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 15-18 வயதினருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Views: - 372

0

0