தொடரும் தடுப்பூசி குளறுபடிகள்: சில நிமிட இடைவெளியில் இளைஞருக்கு 2 முறை தடுப்பூசி…கர்நாடகாவில் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
4 September 2021, 10:42 am
Quick Share

மங்களூரு: தடுப்பூசி முகாமில் இளைஞர் ஒருவருக்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா பகுதியில் உள்ள கோடலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் அருண். கூலித்தொழிலாளியான இவர், அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1ம் தேதி நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் ஊசி போடச் சென்றார்.

latest tamil news


அங்கிருந்த சுகாதார ஊழியர்கள் அவருக்கு முதலில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டனர். சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லுங்கள் என கூறியுள்ளனர். அதனால் தடுப்பூசி போடப்படும் அறையிலேயே அருண் இருந்துள்ளார். அவர் தடுப்பூசி போடத்தான் காத்திருக்கிறார் என எண்ணிய மற்றொரு செவிலியர் அவரை அழைத்து, மீண்டும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து, இது இரண்டாவது டோஸ் ஊசியா… என அந்த இளைஞர் கேட்க, அப்போது தான் தவறை உணர்ந்த சுகாதாரத் துறையினர் மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த இளைஞர் முக கவசம் அணிந்திருந்ததால் இந்த குழப்பம் நடந்ததாகவும், அவர் சரியான போன் எண்ணை கொடுக்கவில்லை என்றும் சுகாதார ஊழியர்கள் கூறினர்.

இருப்பினும் மூன்று மணி நேரம் அந்த இளைஞரை கண்காணிப்பில் வைத்திருந்த பின், வீட்டுக்கு அனுப்பினர். வீட்டுக்கு சென்ற பிறகும், அவரது உடல் நிலையை மருத்துவ வல்லுனர்கள் கண்காணித்து வருகின்றனர்.நேற்று அதிகாலை வரை அவரது உடல் நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் ஏற்படும் குளறுபடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

Views: - 383

0

0