நாடு முழுவதும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு நாளை முதல் தடுப்பூசி.! சுமார் 7 லட்சம் பேர் முன்பதிவு…

Author: kavin kumar
2 January 2022, 10:03 pm
Quick Share

டெல்லி: நாடு முழுவதும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள தற்போதைய நிலவரப்படி சுமார் 7 லட்சம் பேர் கோவின் தளத்தின் மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முதியோர், சிறார்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இதற்காக தனி தடுப்பூசி மையங்களை அமைக்கவும், சிறப்பு மருத்துவ குழுவினரை பணியமர்த்தவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் குழந்தைகள் தடுப்பூசிக்கான முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி சுமார் 7 லட்சம் பேர் கோவின் தளத்தின் மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.முன்பதிவுக்கு ஏற்றவாறு கோவேக்சின் தடுப்பூசிகள், தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் சில இடங்களில் மூடப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட சிறார்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று தடுப்பூசி போட தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஏற்பாடுகள் செய்துள்ளன. சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை வரவழைத்து தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுகிறது.

Views: - 426

0

0