குஜராத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதல்..! 11 பேர் பலி..! பிரதமர் மோடி இரங்கல்..!

18 November 2020, 1:15 pm
vadodara_accident_updatenews360
Quick Share

குஜராத்தின் வதோதராவில் இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர். வாகோடியா கிராசிங் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் சூரத்திலிருந்து பாவகத்துக்கு சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக வதோதராவில் உள்ள எஸ்.எஸ்.ஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

“வதோதராவில் நடந்த சம்பவத்தில் இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது” என்று எஸ்.எஸ்.ஜி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ரஞ்சன் அய்யர் தெரிவித்தார்.

இதற்கிடையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். “வதோதரா அருகே சாலை விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதில் வருத்தம் அடைந்துள்ளேன். தேவையானதைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையட்டும். உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று ரூபானி கூறினார்.

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி இரங்கல் 

இந்த விபத்து குறித்து ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர். “குஜராத்தின் வதோதராவில் நடந்த ஒரு சோகமான சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை அறிந்து வருத்தப்படுகிறேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்களை விரைவாக குணமடைய விரும்புகிறேன்.” என்று குடியரசுத் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி ஒரு ட்வீட்டில், தேவையானவர்களுக்கு நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறினார். “வதோதராவில் நடந்த விபத்தால் வருத்தமடைகிறேன். எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களிடம் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன். விபத்து நடந்த இடத்தில் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், வதோதராவில் சாலை விபத்தில் உயிர் இழந்தது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வேதனை தெரிவித்துள்ளார்.

Views: - 21

0

0