கேரளாவில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்: திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி

Author: kavin kumar
2 October 2021, 9:47 pm
Quick Share

கேரளாவில் அக்டோபர் 25ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து உள்ளதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கொரோனா தொற்று குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.அதன்படி, அக்டோபர் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக திரையரங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணங்களில் முன்னர் 20 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 50 பேர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கில் மாற்றம் ஏற்படும். எனினும், கேரளா முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் தொடரும் என அவர் கூறியுள்ளார்.

Views: - 450

0

0