முன்னாள் சமாஜ்வாதி கட்சியின் அமைச்சர் மீது மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழக்குப் பதிவு..!

27 November 2020, 12:00 pm
Gayatri_Prasad_Prajapati_UpdateNews360
Quick Share

முன்னாள் சமாஜ்வாடி கட்சி அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதி மீது சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையமும் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் லக்னோ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ஊழல் கண்காணிப்பு ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையான விசாரணையை நடத்தியது. இது பிரஜாபதியின் வருமானத்தை விட ஆறு மடங்குக்கும் அதிகமான சொத்துக்களை வெளிப்படுத்தியது. இதையடுத்து இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அனுமதி கோரி ஊழல் கண்காணிப்பு ஆணையம் மாநில அரசுக்கு விசாரணை அறிக்கையை அனுப்பியது.

இந்நிலையில் அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளதால், ஊழலை கண்காணிப்பு ஆணையம் முறையற்ற சொத்துக்களை பதிவு செய்து வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆதாரங்களின்படி, ஊழல் கண்காணிப்பு ஆணையம் சொத்துக்கள் குறித்து வெளிப்படையான விசாரணையை நடத்திய காலகட்டத்தில் பிரஜாபதியின் வருமானம் சுமார் ரூ 50 லட்சம் என்றும் அவரது சொத்துக்கள் ரூ 3.5 கோடி என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணையில் பிரஜாபதியின் 21 பினாமி சொத்துக்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பிரஜாபதி அமேதி, சுல்தான்பூர், பிரதாப்கர் மற்றும் பிற இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்களை தனது குடும்பத்தினர் மற்றும் பிற நெருங்கியவர்களின் பெயரில் வாங்கியிருந்தார்.

இது தவிர, அவரது பினாமி சொத்துக்களில் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு இடங்களும் அடங்கும்.

பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி 2017 மார்ச் முதல் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியின் போது நடந்த சுரங்க முறைகேட்டில் பிரஜாபதியின் பெயரும் உள்ளது. 

Views: - 0

0

0

1 thought on “முன்னாள் சமாஜ்வாதி கட்சியின் அமைச்சர் மீது மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழக்குப் பதிவு..!

Comments are closed.