ஒரு மணி நேரம் ஆகியும் வேகாத முட்டை: கிராமமே ஏமாந்த அதிர்ச்சி சம்பவம்..!!

20 July 2021, 3:16 pm
Quick Share

ஆந்திரா: நெல்லூர் மாவட்டம் வரிகுண்டபாடு மண்டலத்தில் போலி கோழி முட்டைகளை வாங்கி பலரும் ஏமாந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் வரிகுண்டபாடு மண்டலத்தில் உள்ள கிராம பகுதிகளில் நேற்றைய தினம் முட்டை விற்கும் நபர் ஒருவர் மினி வேனில் முட்டைகளை ஏற்றுக்கொண்டு ஊருக்குள் வலம் வந்துள்ளார். இதனை கண்ட மக்கள் வண்டியிலே முட்டை வருவதால் விலை கேட்க 30 முட்டை ரூ.130 என கூறியுள்ளார். முட்டையின் விலை குறைவாக இருந்ததால் அங்கிருந்த கிராம மக்கள் முட்டையை அதிகம் வாங்கி உள்ளனர்.

முட்டைகள் அனைத்தும் தீர்ந்தவுடன் தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு கிளம்பி விட்டார் அந்த முட்டை வியாபாரி. வாங்கிய முட்டைகளை கிராமமக்கள் அவர் அவர் வீடுகளில் சமைக்கத் தொடங்கி உள்ளார். சுமார் 1 மணி நேரமாகியும் முட்டை வேகவில்லை.

உடனே அனைவரும் சந்தேகத்தில் அக்கம் பக்கத்தில் ஒன்று கூடி பேச ஆரம்பித்து விட முட்டை உடைத்து பார்த்தால் உள்ளே ஒன்றும் இல்லை. பின்னர் தான் தெரிந்துள்ளது முட்டை வியாபாரி தங்களை ஏமாற்றி முட்டையை விற்பனை செய்துள்ளார் என்பது.

முட்டையை பரிசோதனை செய்ததில் பிளாஸ்டிக் முட்டை போல் இருந்துள்ளது. இதனால், அனைவரும் ஒருசேர முட்டை வியாபாரியால் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தது அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து வரிகுண்டபாடு போலீஸ் நிலையத்தில் அந்த முட்டை வியாபாரி மீது கிராம மக்கள் ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர்.

Views: - 233

0

0