வி.ஐ.பி தரிசனத்திற்கு அனுமதி வேண்டும் : திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு பக்தர்கள் போராட்டம்!!

12 July 2021, 11:44 am
Thirupathi Protest- Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதியில் ஆனிவார ஆஸ்தான உற்சவம் நடைபெற உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை விஐபி தரிசன அனுமதி கேட்டு பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இம்மாதம் 16ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானம் உற்சவம் நடைபெற உள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திரு நாட்களுக்கு முன் வரும் செவ்வாய் அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில் ஏழுமலையான் கோவிலை கழுவி சுத்தம் செய்வது வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும்.

அதன் அடிப்படையில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு நாளை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. எனவே நாளை விஐபி தரிசன அனுமதியை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில் விஐபி தரிசனத்திற்காக முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பரிந்துரை கடிதங்களை வாங்கி வந்திருந்த பக்தர்கள் தரிசன அனுமதி கேட்டு திருப்பதி மலையில் உள்ள கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்தை அனுகினர்.

ஆனால் நாளை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தால் டிக்கெட் வழங்க இயலாது என்று அங்கு பணியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இது பற்றி முன்னரே தெரிந்திருந்தால் நாங்கள் எங்களுடைய பயண திட்டத்தை மாற்றி வைத்திருப்போம்.

எனவே முன்கூட்டியே இதுபற்றி அறிவிக்காது நிர்வாகத்தின் தவறு என்றும் தேவஸ்தான நிர்வாகம் எங்களுக்கு நாளை விஐபி தரிசன அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 139

0

0