ஐன்ஸ்டீனை மிஞ்சிய அறிவுச்சுடர்! பள்ளிக்கூடம் போகாமலே B.Tech முடிச்ச தமிழ்ப் பொண்ணு விசாலினி!

15 April 2021, 4:24 pm
Visalini the highest IQ record holder
Quick Share

ஐன்ஸ்டீனையே மிஞ்சும் அளவுக்கு IQ அளவைக் கொண்டிருக்கும் நம்ம நெல்லை பொண்ணு விசாலினி பற்றி தெரியுமா உங்களுக்கு?

கண்டிப்பா பலருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. பல தனியார்  நிறுவனங்கள்  எல்லாம் வலை வீசி தேடிக்கொண்டிருக்கும் இந்த விசாலினி தாயின் கர்ப்பத்திலிருந்து ஏழாவது மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தை என்றால் நம்ப முடிகிறதா உங்களால்? ஆனால் அதுதான் உண்மை.

Visalini the highest IQ record holder

குறை பிரசவத்தில் பிறந்த இந்த பெண் குழந்தைக்கு 30 நாட்கள் தான் வாழ்நாள் என்று மருத்துவர்கள் எல்லாம் கைவிரித்து விட்டனர். ஆனால், நான் இந்த பிரபஞ்சத்தில் சாக பிறக்கவில்லை சாதிக்க பிறந்துள்ளேன் என்று மருத்துவர்களின் நம்பிக்கை எல்லாம் அப்போதே பொய்யாக்கினாள் விசாலினி.  அப்படி அற்புதம் நிகழ்த்தி வளர துவங்கியவள் தான் விசாலினி. இவளின் IQ அளவு தான் 225.

Visalini the highest IQ record holder

சாதாரணமாக மனிதர்களின் IQ எனும் அறிவுசார் திறன் 90 முதல் 110 வரை மட்டுமே இருக்கும். எடுத்துக்காட்டாக கணினி உலகில் கொடிகட்டி பறக்கும் பில்கேட்ஸின் IQ 160 தான். ஏன்? அறிவியல் மேதை என்று நாம் சொல்லக்கூடிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் IQ 190 க்குள் தான் என்கின்றனர் அறிஞர்கள். ஆனால் விசாலினியின் IQ 225 என்று கண்டறியப்பட்டுள்ளது. 

Visalini the highest IQ record holder

பல உயரிய தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்ததை அடுத்து, அப்போது 8 ஆம் வகுப்பு மட்டுமே முடித்த விசாலினிக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் B.Tech படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முதல் 5 செமஸ்டர்களை சரியான நேரத்தில் முடித்தார், அதன் பிறகு அடுத்த 3 செமஸ்டர்களையும் 6 மாதங்களில் கரைத்துக் குடித்துவிட்டு, 3 ஆண்டுகளில் பட்டத்தையும் பெற்றார்.

Visalini the highest IQ record holder

பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய MCP தேர்வில் விசாலினி 87% மதிப்பெண், அதைவிட கடினமான CCNA தேர்வில் 90% மதிப்பெண், CCNA security தேர்வில் 98% மதிப்பெண் என தேர்வுக்கே சவால் விடுமளவுக்கு திறமைக் கொண்ட பெண்ணாக மாறினார் நம்ம ஊரு பொண்ணு விசாலினி.

The Pride Of India – Visalini என்று HCL நிறுவனம் பட்டம் வழங்கியபோது அவருக்கு வயது வெறும் 11 தான். டெல்லியில் 2015 ஆண்டு நடந்த கூகிள் இந்தியா உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றினார். அதையடுத்து சர்வதேச TED மாநாட்டில் சிறப்புரையாற்றிய விசாலினி, தனது 11 வயதில் The Young TEDx Speaker ஆக தேர்வு செய்யப்பட்டார்.

Visalini the highest IQ record holder

அதைத் தொடர்ந்து 15 வயதில், பெங்களூரில் உள்ள ISRO தலைமையகத்தில் 700 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கூட்டத்தில் ‘Big Data and Artificial Intelligence’ பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். ISRO வழங்கிய ஒரு திட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தார்.

விசாலினியின் இந்த அற்புத IQ திறனைக் கண்டறிந்தது ஆசிரியையான  விசாலினியின் பாட்டி தான். ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பார்த்த அவருக்கு சற்று வித்தியாசமான செயல்பாடுகளைக் கொண்டிருந்த பேத்தியின் திறனை கண்டுபிடிப்பது பெரிய விஷயமாக இருக்கவில்லை.

இரண்டரை வயதில் காம்பஸ் இல்லாமல் சாக்பீஸ் இல்லாமல் சரியாக சீரான வட்டம் போட்டதை பார்த்து விசாலினியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரின் IQ திறனை சோதிக்க பரிந்துரைத்தனர்.

விசாலினியின் IQ திறனை மதிப்பிட்ட மருத்துவ உளவியலாளர்கள், குழந்தையின் மீது அதிக கவனம் செலுத்துமாறு அவரது பெற்றோருக்கு அறிவுறுத்தினர்.

Visalini the highest IQ record holder

“இந்த குழந்தை கத்தி போன்றது. கத்தியை ஒரு கேக்கை வெட்டுவதற்கு, தலையை வெட்டுவதற்கு என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று விசாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த வார்த்தைகளை மனதில் கொண்டு, விசாலினியின் பெற்றோர் அவர்களின் வாழ்க்கையை விசாலினிக்காகவே வாழவும் துவங்கினர். பெற்றோர்கள் வழங்கிய ஆதரவோடு விசாலினியும் பல சாதனைகளை நிகழ்த்தினாள்

இவ்வளவு அறிவுசார் திறன் கொண்ட விசாலினியின் எதிர்கால கனவுகள் என்னென்ன தெரியுமா? அவரின் முக்கியமான கனவுகள் மூன்று உள்ளன. ஒன்று இந்தியாவுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நோபல் பரிசை வாங்குவது, இரண்டாவது கணினி அடிப்படையிலான நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிப்பது, மூன்றாவது, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென ஒரு ஆதரவு இல்லம் தயார் செய்து அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்பது தான் அறிவுச்சுடர் விசாலினியின் பொதுநலம் சார்ந்த மூன்று எதிர்கால கனவுகள்.

Visalini the highest IQ record holder

நம்ம ஊரு தமிழ்ப் பெண் விசாலினியின் கனவுகள் கைகூட Updatenews360 சார்பாக நாமும் வாழ்த்துவோம்.

Views: - 59

0

0