யாரு சாமி இவரு.. மியூசிக்கில் வெரைட்டி காட்டும் இளைஞருக்கு குவியும் பாராட்டு: வைரல் வீடியோ

7 January 2021, 9:06 am
Quick Share

கீபோர்டு வாசிக்கும் இளைஞர் ஒருவர், டான்ஸ் செய்வதுடன், மேடையில் தனக்கிருக்கும் திறமைகளை ஒரே நேரத்தில் செய்து காட்டி அசத்தினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தங்களுக்கு இருக்கும் திறமைகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி, அதன் மூலம் பிரபலம் அடைபவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவரை தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். விகாஸ் துதேஜா என்ற பேஸ்புக் பயனர் ஒருவர், வீடியோ ஒன்றினை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவில், உள்ளூர் மேடை இசை நிகழ்ச்சி ஒன்றில், இசைக்கலைஞர் ஒருவர், கீபோர்டு வாசித்த படி, தனது துள்ளல் நடனத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும், கீபோர்டை சுற்றி சுற்றி வந்த வாசித்தபடி, அவர் ஆடும் நடனம் சூப்பராக இருந்ததால், நெட்டிசன்கள் அவர்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். டிஜே போன்று அவர் செயல்படுவதாக, பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு நிமிடம் ஓடும் இந்த வீடியோவை பலர், பேஸ்புக்கில் ஷேர் செய்ய அது வைரலானது.

இந்த வீடியோவை இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஒருவர் ‘‘என்ன ஒரு திறமை’’ என பதிவிட, மற்றொருவர், ‘‘இவர் போல் எங்களுக்கும் ஒரு கீபோர்டு நிபுணர் தேவை’’ என பதிவிட்டுள்ளார். ஒருவர் அவரின் போன் நம்பரை கேட்டு பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில், துருக்கிய இசைக்கலைஞர் பிலால் கோரேகன், பிரபல பஞ்சாபி பாடகர் டேலர் மெஹந்தியின், ‘‘துனக் துனக் துன்’’ பாடலை பாடிய வீடியோவும் இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. என்ன.. உங்களுக்கு ‘‘புதுச்சேரி.. கச்சேரி…’’ பாடலில் வரும் ‘சிங்கார வேலன்’ கமல்ஹாசனை பார்த்தது போல் இருக்கிறதா..

Views: - 60

0

0