என்னது கைக்கடிகாரத்தின் விலை ரூ.5 கோடியா?: ஏர்ப்போர்ட்டில் என்னதான் நடந்துச்சு…ஹர்திக் பாண்டியா விளக்கம்..!!

Author: Aarthi Sivakumar
16 November 2021, 11:06 am
Quick Share

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை ஏர்போர்ட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து இரண்டு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. மேலும், அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி எனவும், அதற்கு சரியான ஆவணங்கள் ஹர்திக் பாண்டியாவிடம் இல்லை எனவும் கூறப்பட்டது.

Image

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா இதற்கு தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், கடந்த நவம்பர் 15ம் தேதி துபாயில் இருந்து மும்பைக்கு வந்தேன். அதிகாலையில் ஏர்போர்ட்டில் என்னுடைய லக்கேஜை எடுத்த பின் நானே நேரடியாக மும்பை ஏர்போர்ட்டில் இருக்கும் சுங்கத்துறை கவுண்டருக்கு சென்றேன்.

நான் துபாயில் இருந்து வாங்கி வந்த கைக்கடிகாரங்களை அவர்களிடம் கொடுத்தேன். ஏர்போர்ட் இதற்கு இறக்குமதி வரி செலுத்த வேண்டும் என்று கூறினேன். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக தவறான தகவல்கள் பரவுகின்றன.

நானாகவே சென்றுதான் துபாயில் இருந்து வாங்கி வந்த பொருட்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். இதற்கான எந்த விதமான இறக்குமதி வரியை கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். இதில் சுங்கத்துறை அதிகாரிகள் என்னுடைய ஆவணங்களை கேட்டனர். சோதனை அதை நான் அவர்களிடம் அளித்தேன்.


சுங்க வரி தொடர்பாக இப்போது அதிகாரிகள் கணக்கீடுகளை செய்து வருகிறார்கள். அவர்கள் தெரிவிக்கும் தொகையை கொடுப்பதாக நான் உறுதி அளித்துள்ளேன். நான் வாங்கிய வாட்ச்களின் மதிப்பு 1.5 கோடி ரூபாய்தான். இணையத்தில் வரும் செய்திகள் போல 5 கோடி ரூபாய் கிடையாது. நான் சட்டத்தை மதிக்க கூடிய குடிமகன். அனைத்து அரசு அலுவலர்களையும் நான் மதிக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில், ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த மிக அரிதான பச்சை நிற மரகதங்கள் பொறிக்கப்பட்டுள்ள படேக் பிலிப் நவ்ட்டில்ஸ் பிளாட்டினம் 5711 வாட்ச் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 622

0

0