“இந்திய விவசாயிகளுக்கு வரலாற்றுப்பூர்வமான தருணம்”..! விவசாயிகளுக்கு மோடி வாழ்த்து..!

20 September 2020, 4:51 pm
pm_modi_updatenews360
Quick Share

பாராளுமன்றத்தில் விவசாய சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். 

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்த இரண்டு விவசாய மசோதாக்கள், காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப்பில் விவசாயிகளின் போராட்டத்தைத் தூண்டியது.

இதை முன்வைத்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும் கடந்த வியாழக்கிழமை மக்களவையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் இன்று மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேறியதை அடுத்து விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக உள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி இதை இந்திய விவசாய வரலாற்றில் ஒரு வரலாற்றுப்பூர்வ திருப்புமுனை என்று அழைத்தார் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், அவர்களின் விளைபொருட்களை அரசாங்கம் வாங்குவது தொடரும் என்றும் உறுதியளித்தார்.

“இந்திய வேளாண் வரலாற்றில் ஒரு வரலாற்றுப்பூர்வமான தருணம்! பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எங்கள் கடின உழைப்பாளி விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள். இது விவசாயத் துறையின் முழுமையான மாற்றத்தை உறுதி செய்வதோடு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

“பல தசாப்தங்களாக, இந்திய விவசாயி பல்வேறு தடைகளால் பிணைக்கப்பட்டு இடைத்தரகர்களால் கொடுமைப்படுத்தப்பட்டார். பாராளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்கள் விவசாயிகளை இத்தகைய துன்பங்களிலிருந்து விடுவிக்கின்றன.

இந்த மசோதாக்கள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும். மேலும் அவர்களுக்கு அதிக வருமானத்தை உறுதி செய்யும்.” என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 10

0

0