பிரதமர் மோடி மயில்களுடன் பிஸி., நம்மை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் : ராகுல்காந்தி விமர்சனம்..!

14 September 2020, 11:11 am
Quick Share

பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் கொரோனா நோய்தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை இந்த வாரம் 50 லட்சத்தை தாண்டிவிடும் எனவும் கூறினார்.

கொரோனா தொற்று பரவல் மற்றும் அதற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

அந்த வகையில், மத்திய அரசின் ஊரடங்கு நடவடிக்கை ஏழை மக்கள் மீதான தாக்குதல் எனவும், இதனால் தினக்குலிகள் தான் பெரும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாககவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

மட்டும் இன்றி, மத்திய அரசின் திட்டமிடாத நடவடிக்கையால் வரலாறு காணாத அளவு உள்நாட்டு உற்பத்தி 24 சதவீதம் குறைந்துள்ளது என ராகுல்காந்தி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் இன்று மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, அதில், பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் என விமர்சித்துள்ளார்.

மேலும், கொரோனா நோய்தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை இந்த வாரம் 50 லட்சத்தை தாண்டிவிடும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அவரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பலரும் தங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0