திருமண நிகழ்வுக்காக சென்ற பேருந்து – லாரி மீது மோதி விபத்து : 50 பேர் படுகாயம்!!

21 June 2021, 9:44 am
andhra Accident - Updatenews360
Quick Share

ஆந்திரா : நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 50 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திரா மாநிலம் கடப்பாவில் இருந்து கிட்டலூரில் இன்று அதிகாலை நடைபெற இருக்கும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக 50 பேர் கொண்ட பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

நெல்லூர் அருகே உள்ள வெங்கட ரெட்டி பள்ளி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் பேருந்து கவிழ்ந்து அதில் பயணித்த 50 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 173

0

0